Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…! 100 நாள் வேலைக்கு பணம் வராதாம்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!

குறைதீர்ப்பு அதிகாரிகள்  நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த நிதியாண்டு முதல் 80 % மாவட்டங்களுக்கு 100 நாள்  வேலை திட்டம் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்காத மாநிலங்களுக்கு இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தகவல்படி குஜராத், அருணாச்சல பிரதேசம், கோவா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபர், லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒரு குறைதீர்ப்பு அதிகாரி கூட நியமிக்கப்படவில்லை.

சில மாநிலங்களில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே குறைதீர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் தலா நான்கு மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 80% மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்காத மாநிலங்களுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஆண்டு முதல் வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி மத்திய ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா  சென்ற 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் எல்லா மாநிலங்களிலும் குறைதீர் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 80 சதவீத மாவட்டங்களில் குறைதீர்க்க அதிகாரி இருக்க வேண்டும். எனவே அடுத்த நிதியாண்டில் முதல் குறைந்தபட்ச  80% மாவட்டங்களில்   குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்காத மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி வழங்க கூடாது என கூறியுள்ளார்.

Categories

Tech |