Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இந்த கார்டை சீக்கிரம் வாங்குங்க…. ரயில்வே அளித்த செம ஆஃபர்….!!!

கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய ஆஃபர்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புது ஆஃபர் ஒன்றை இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐஆர்சிடிசி பிஒபி ரூபே காண்டாக்ட்லெஸ் என்ற ஒரு கிரெடிட் கார்டை வெளியிட்டுள்ளது. இதற்காக பேங்க் ஆப் பரோடா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன்  கைகோர்த்து இணைந்துள்ளது. மேலும் இதன் மூலம் ரயிலில் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டண சுமையை குறைக்க வழிவகை செய்கிறது. எப்படி என்றால், ஆன்லைன் மூலம் இந்த கார்டு வழியாக கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கான ஆஃபருடன் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிஓபி கார்டை நீங்கள் வேறு ஏதேனும் வழிகளில் குறிப்பாக எரிபொருள் முதல் மளிகை பொருட்கள் வரை தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் போது, இதன் மூலம் பல சலுகைகளையும் அளிக்கிறது. மேலும் இந்த கார்டு மூலம் அனைத்து ரயில்வே முன்பதிவிற்கும் ஒரு சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இதுபற்றி நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தலைமை இயக்க அதிகாரி பிரவீணா ராய் கூறியுள்ளதாவது, ஐஆர்சிடியில் இந்த கிரெடிட் கார்டு மூலம் தினசரி 7 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெறுவதாகவும் இதனால் பெரிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |