Categories
மாநில செய்திகள்

யூடியூப் சேனலுக்கு எச்சரிக்கை!…. “இனி இந்த மாதிரி ஷோ பண்ணாதீங்க”…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் யூடியூப் (Youtube) பயன்படுத்தி பலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் ‘prank show’ என்ற பெயரில் ஆபாசமாகவும், வெறுப்பை தூண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ‘kovai 360’ யூடியூப் சேனல் prank show என்ற பெயரில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கன்டென்ட்டுகளை உருவாக்கி அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சாலையில் நடந்து செல்பவர்களின் முகத்தில் அடிப்பது போல் நடிப்பது, எலக்ட்ரிக் சாக்கொடுப்பது போன்று மக்களை பீதியடையவைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இப்படியான கன்டென்ட்டுகளையே இந்த யூடியூப் சேனல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை ஷேர் செய்து, அநாகரீகமாக நடந்துகொள்ளும் இந்த யூடியூப் சேனல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சரவணன், “இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி வெளியானவுடன் அந்த யூடியூப் நிர்வாகிகளுக்கு உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டதில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்தால் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |