Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் : ஸ்பெயினிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினிடம் , இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.இதனிடையே நேற்றிரவு புவனேஸ்வரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மோதின.இதில் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 3-3 என சமநிலையில் இருந்தபோது, பெப் குனில் 54-வது நிமிடத்திலும், மார்க் மிராலஸ் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இறுதியாக
3-5 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
இதுவரை 6-லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதையடுத்துவருகின்ற மார்ச் 12, 13-ம் தேதிகளில் ஜெர்மனியுடன் இந்தியா மோதுகிறது.இதேபோல் மகளிர் பிரிவிலும் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.

Categories

Tech |