91 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தம்பதியினர் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஐரோப்பா கண்டத்திலுள்ள ஜெர்மனியில் தோல்பன் மற்றும் மிகி என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு திருமணமான நாளிலிருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்த தம்பதியினர் துபாய், நியூசிலாந்து, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் தற்போது வரை 91 நாடுகளில் வலம் வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கப்பல் மூலமாக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் நவீன வசதி கொண்ட ஒரு சொகுசு பேருந்தில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் தற்போது மாமல்லபுரம் பகுதியை சுற்றிப் பார்க்கின்றனர். இவர்கள் வந்த சொகுசு பேருந்தை மாமல்லபுரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த சொகுசு பேருந்தில் சோலார் மூலம் மின் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் படுக்கையறை, சமையலறை, குளியலறை போன்ற வசதிகளும் உள்ளது. இந்த வாகனம் எல்லா விதமான பாதைகளிலும் சுலபமாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு தம்பதியினர் அடுத்ததாக ஓடிஸா, குஜராத், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளுக்கு செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.