கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை இந்தப் போர் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியதாவது, உக்ரைனில் அடுத்த 24 மணி நேரம் பயங்கரமானதாக இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தெரிவித்துள்ளார்.