Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம் போல…. சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது…. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…..!!!!!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று (பிப்..27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4,801 ஆக இருந்தது. அதேபோன்று 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 38,408 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில் 1 கிராம் வெள்ளி விலை ரூபாய் 69 ஆக இருந்தது. இதையடுத்து 1 கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் இன்று(பிப்..28) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து, ரூபாய் 38,504க்கும்,  கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து ரூபாய் 4,813க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.10 அதிகரித்து ரூபாய் 70.10க்கும், கிலோ வெள்ளி ரூபாய் 70, 100க்கும் விற்பனையாகிறது.

Categories

Tech |