பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் எருக்கஞ்சேரியில் கோபி-லதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் கோபி முத்தமிழ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரமும், லதா பூ வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இந்த கோபியின் காய்கறி கடைக்கு எதிரில் சகோதரர்களான ஆனந்த், அரவிந்த் ஆகியோர் பழக்கடை ஒன்றை நடத்திவருகின்றனர். இவர்களுக்கிடையில் வியாபாரம் செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் அரவிந்த் தனது நண்பர்கள் மூன்று பேரின் உதவியுடன் கோபியை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதை தடுக்க வந்த அவரது மனைவி லதாவையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதன்பிறகு அவர்கள் 5 பெரும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த லதாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் கொலை செய்யப்பட்ட கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆனந்த், அரவிந்த் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.