தெற்கு கடலோர மாவட்டங்களில் மார்ச் 2-ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், மார்ச் 1ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும், மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு பல இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை பெய்யும்.
மேலும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மார்ச் 2-ஆம் தேதி முதல் மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 3ஆம் தேதி தமிழகம் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் அங்கு கடலில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.