Categories
மாநில செய்திகள்

“என் கை சுத்தமா இருக்கு”…. திடீர் விசிட் அடித்த முதல்வர்…. கையில் கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட் முதல்வர்  ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் அவர் டென்ஷன் ஆகி உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உள்ளாட்சியில் தி.மு.க ஆட்சிதான் என்கிற நிலையை உருவாக்கி விட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனையடுத்து  அடுத்ததாக மக்களவைத் தேர்தலுக்கான பணியில் இறங்கி விட்டார் என்கின்றார்கள். இந்நிலையில்  உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ,பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்   போன்றோர் வருகை தருகின்றனர்.

இதனை 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது, “உங்களில் ஒருவனாக எனக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு என்னுடைய பிறந்த நாளில் உங்களுக்கு விளங்கும் அன்பு பரிசாக- நன்றி பரிசாக உங்களில் ஒருவன் என்கிற புத்தகத்தை தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன்” என மு.க ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கலுக்கு ரொக்கத் தொகையாக குடும்பத்தலைவிகளுக்கு  1,000 ரூபாய் வழங்கவில்லை. அதனால் தேர்தலில் தி.மு.க பின்னடைவு ஏற்பட்டுமோ என்ற பயம்  ஸ்டாலினுக்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இமாலய வெற்றி கிடைத்து இருப்பதால் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார்.  அதேநேரம் மாவட்ட செயலாளர்கள் ,அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினுக்கு ஒரு ரிப்போர்ட் போயுள்ளது. அதன்பின்னர் உச்சகட்ட டென்ஷனாகி உள்ள அதன் தொடர்ச்சியாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது “உள்ளாட்சி தேர்தல் வெற்றியை ஊக்கமாக வைத்துக்கொண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேலையை பாருங்க. உங்களில் சிலபேர் பற்றி எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு இன்னும் சீனியர், ஜூனியர் சண்டை சாதி பஞ்சாயத்துக்கு எல்லாம் முக்கியம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்காது. அது மட்டுமில்லாம சில பேரு கை நீட்டுவதாகவும்  தகவல் வருது. என் கை சுத்தமா இருக்கு அதே மாதிரி ஒவ்வொருத்தரும் இருக்கணும்” என லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம்.

Categories

Tech |