Categories
மாநில செய்திகள்

10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. இன்னும் சற்று நேரத்தில்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனிடையில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பாக 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பிப் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

அதே நேரம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வானது இம்மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து நடப்பாண்டு கண்டிப்பாக பொதுதேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (பிப்..28) மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். அதாவது பொதுத்தேர்வு அட்டவணையை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி 28) மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |