Categories
சினிமா தமிழ் சினிமா

ச்ச மிஸ் பண்ணிட்டாங்களே….! “வலிமை படத்தில் ஹீரோயினாக”…. இவர்தான் நடிக்க இருந்தாராம்….!!!

ஹீமா குரோஷி நடித்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடிக்க இருந்த நடிகை பிரபல பாலிவுட் நடிகை ப்ரணீதி சோப்ரா தானாம்.

நடிகர் அஜித் நடித்த வலிமை  திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படம் ஹச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஆவார். மேலும் வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான அஜித்தின் படங்களை விட வலிமை திரைப்படம் அதிக வசூலை கொடுத்திருக்கிறது என்று போனி கபூர் பேட்டியளித்திருக்கிறார். இதனையடுத்து போனிகபூர் வலிமை  படத்தின் வசூல் விவரங்கள் பற்றி வெளியிடவுள்ளார்.

மேலும் வலிமை படத்தில் அஜித்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் கைதட்டல்கள் வாங்கியவர்கள் நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கார்த்திகேயன் ஆவார். இப்படத்தில் ஹீமா குரோஷி நடித்த கதாபாத்திரத்தில் இதற்கு முன் நடிக்க இருந்த நடிகை பிரபல பாலிவுட் நடிகை ப்ரணீதி சோப்ரா தானாம். ஆனால் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனதன் காரணமாக நடிகை ஹுமா குரேஷியை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.

Categories

Tech |