Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் பள்ளி கோட்டை வடக்குத் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மகன் மாடசாமி(23), சுரண்டை கோட்டை தெரு பகுதியில் இருக்கும் மனோஜ் குமார்(19), விருதுநகர் நகரில் உள்ள மற்றொரு மனோஜ் குமார்(19) ஆகிய 3 பேரையும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சப் இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் தலைமையில் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த போது தென்காசி மாவட்டம், சுரண்டை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.  இவர்களிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குற்றவாளியான மாடசாமி மீது கொள்ளை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 10க்கும் அதிகமான வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

Categories

Tech |