அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அதோடு ஜெயகுமார் விரைந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
Categories