Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. மதுரை-சிங்கப்பூர் இனி ஈசியா பறக்கலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. அதில் உள்நாட்டு சேவையாக நாள்தோறும் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கை, சார்ஜா, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு வெளிநாட்டு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக காலையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும் பெங்களூர் விமானம், அதனைத் தொடர்ந்து வரும் டெல்லி, மும்பை மற்றும் மாலையில் திருப்பதிக்கு செல்லும் விமானம் உள்ளிட்டவை பயணிகளின் வருகை குறைவினால் தற்போது ரத்து செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 9 முதல் 10 விமானங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேவையுடன் இயக்கப்படுகிறது.

தற்போது புதிதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை பயண சேவை தொடங்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மதுரைக்கு மாலை 6.40 மணிக்கு வந்து சேரும்.

அதேபோல் தினமும் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் விமானம் காலை 4.30 மணிக்கு சிங்கப்பூருக்கு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் அவதியுற்று சிங்கப்பூர் சென்று வந்த பயணிகள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். இந்த புதிய விமான சேவை மூலம் வர்த்தகம் செய்யும் வியாபாரிகளினால் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |