Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசிக்க…. இனி ரொம்ப செலவாகும்…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா  தொற்றின் காரணமாக திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஜித  சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று  குறைய தொடங்கியதை  தொடர்ந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் குறித்த விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே என்கிறார்கள். அதன்படி 120 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சுப்ரபாத சேவை டிக்கெட்டு தற்போது 2000 ரூபாயாகவும் , கோவிலுக்குள் 45 நிமிடம் அமர்ந்து சுவாமியை தரிசித்து அர்ச்சனை மற்றும் சேவைகளுக்கான ரூபாய் 200 மதிப்புள்ள டிக்கெட் 5,000 ரூபாயாகவும், ரங்கநாயகி மண்டபத்தில்வழங்கப்பட்ட வேத ஆசீர்வாத டிக்கெட் 3,000 லிருந்து  10,000 ரூபாயாகவும் , ரூ 1,000 மதிப்புள்ள கல்யாண உற்சவத்தை 25,000 ஆகவும், வெள்ளிக்கிழமையில் நடக்கும் அவசர சேவைகள் 52 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்ரூ.1 லட்சத்து 2 ஆயிரமாகவும் நிர்ணயித்துள்ளது.

மேலும் வியாழக்கிழமை நடைபெறும் திருப்பாவாடை சேவைக்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் ரூபாய் 100 மதிப்புள்ள ஜிலேபி 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்கள் ஆகவே 50,000 மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்காரணமாக தற்போது உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி சனிக்கிழமை கோவிலில்56,559 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,751 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தற்போது ஊரடங்கு பிறகு நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானமாக 5 கோடியே 40 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |