மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம் கிராமப்பகுதிகளில் 879 இடங்களிலும் நகர்ப்புறங்களில் 80 இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 959 இடங்களில் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காக வந்து தங்கியிருப்பவர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3,892 பணியாளர்கள் சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு ஊற்றும் பணியை செய்துள்ளனர். மேலும் சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் சுகாதார ஊழியர்கள், தாசில்தார் சரவணன், மருத்துவ அலுவலர்கள் இனியாள் மண்டோதரி, சுசித்ரா, தாய் சேய் நல அலுவலர் பியூலா, சுகாதார பணியின் துணை இயக்குனர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.