முறைகேடு செய்த விவகாரத்தில் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் ஓசூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்வி அலுவலராக அன்னையப்பா என்பவர் 2021-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த கெலமங்கலம் பகுதியில் உள்ள ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
ஆனால் அதை தற்போது புதிதாக பதவியேற்ற கல்வி அலுவலர் லட்சுமி நாராயணனிடம் இன்றுவரை ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். அதன்பிறகு மாவட்ட கல்வி அலுவலர் அன்னயப்பாவை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.