தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு தள்ளியுள்ளது.
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 07) 425 ரூபாய் சரிந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 423 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்ந்து 52 ரூபாய் 60 பைசாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.
அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அமெரிக்காவின் இராணுவ தளத்தை தாக்கியது.இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இந்த பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.