ஆட்டோ மோதி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் மேலகுப்பம் என்ற பகுதியில் நாராயணசாமி-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாள் ஒரு வேலையாக கல்லாகுப்பம் பகுதிக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்னம்மாளின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பொன்னம்மாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து செஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.