Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

” நம்பிக்கையாக இருங்கள் ” உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள்…. தாயகம் திரும்பிய மாணவியின் பேட்டி …!!

தாயகம் திரும்பிய மாணவி கூறியுள்ள பதிவு அனைவரிடமும் நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பிரியா என்ற மகள் உள்ளார். இவர்  உக்ரைனில் முதலாமாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மத்திய அரசு உக்ரைனில் இருந்து சில மாணவர்களை மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பிறகு அந்த மாணவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து திரும்பி வந்த மாணவி செல்வ பிரியா தன்னை மத்திய அரசு  பாதுகாப்பாக அழைத்து வந்தது போல் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மற்ற மாணவர்களையும் கண்டிப்பாக அழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அங்குள்ள தமிழக மாணவர்கள் கண்டிப்பாக இந்திய தூதரகத்தின் உதவியை மட்டும் நாட வேண்டும் என நிருபர்களிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |