பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மாசி மாதத்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு மாசி மாதத்தையொட்டி சிறப்பான தேர்த்திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று இரவு கொடியேற்றத்துடன் மாசித்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 15-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழா முடிவடையும் வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெறும். மேலும் அம்மனை சிறப்பாக அலங்காரம் செய்து கோவிலை சுற்றி உலா வருவர். இதனையடுத்து வருகிற 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.