Categories
உலக செய்திகள்

உக்ரைனை காப்பாற்ற கூகுள் மேப் சேவை நிறுத்தம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான கமிஷனர் சபியா தெரிவித்தார். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தன்னுடைய கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. கூகுள் மேப் உதவியுடன் ரஷ்ய படைகள் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பாக அறிந்து கொள்வதை தடுப்பதற்காக உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவே கூகுள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |