‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் ”வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடித்து பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியானது.
அதன்படி சில வருடங்களுக்கு முன் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ”சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சூர்யாவால் அந்த படத்தில் நடிக்க முடியாத காரணத்தினால் ஆர்யா நடித்ததாக கூறப்படுகிறது.