Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நீக்கப்பட்ட வழிகாட்டு பலகைகள்… வழி தெரியாமல் அலையும் ரஷ்யப்படைகள்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ரஷியப் படைகளை பொதுமக்கள் சூழ்ந்து வழிமறித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 5-ஆம் நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டின் சாலை பராமரிப்பு நிறுவனமானது, ரஷ்யப்படைகளின் தாக்குதலை தாமதப்படுத்தும் நோக்கில், அவர்களை குழப்புவதற்காக  சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகைகளின் திசைகள் மாற்றி வைத்திருக்கிறது.

மேலும் ஊர்களின் பெயர்களுக்குப் பதிலாக, ‘ரஷ்யாவிற்கு திரும்பிப் போ’ என்னும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதி மக்கள், ரஷ்ய படைகள் நகர்வதை தடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. ரஷ்ய படை வீரர்களை கெய்வ் நகருக்கு நகரவிடாமல் மக்கள் சூழ்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |