Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில்…. பரிசோதனை செய்யும்போது உயிரிழந்த வங்கதேச பயணி..!!

சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73). புற்றுநோயாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கே திரும்ப முடிவுசெய்தார். இதையடுத்து கொல்கத்தா வழியாக வங்கதேசம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார்.

அங்கு அவரது உடமைகளைப் பரிசோதனை செய்யும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள், பரூக் அகமதுவை பரிசோதித்தனர். பின்னர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் துறையினர், பரூக் அகமது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |