தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். ஆகவே அனைத்து ஏழை, எளிய மக்களும் சமமாக மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெறவேண்டும் என்ற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்ற திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கைரேகை வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. அதாவது பல பேரின் கைரேகை அந்த இயந்திரத்தில் பதியாததால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த பிரச்சனை தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே ஏற்பட்டது. இதன் காரணமாக இது குறித்த நிறுவனமான (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின்) – (Unique Identification Authority of India- UIDAI) உயர் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் கால கட்டத்தில் கைரேகை சரிபார்க்கப்படாமலேயே அனைத்து மலிவு பொருட்களும் மக்களுக்கு வழங்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து ஏழை, எளிய மக்களும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பொருட்கள் அனைத்தையும் பெற்றுவிட்டார்களா மற்றும் முறையாக அனைவருக்கும் அத்தியாவசிய பண்டங்களான அரிசி, பருப்பு, எண்ணெய் முதலானவை விநியோகிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ரேஷன் கடைப் பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது