பட்டாசு ஆலையில் பற்றிய தீ விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று ராஜா என்பவர் பாம்பு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடிரென பட்டாசு வெடித்து ஆலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்துவிட்டார். குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு ஆலையின் போர் மேன், ஒயிட் அங்கு இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய பாலையின் உரிமையாளரான சண்முகத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.