Categories
மாநில செய்திகள்

TN TRB காலிப்பணியிடங்கள்…. எவ்வளவு இருக்கு தெரியுமா?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் அரசு பள்ளிகளிலுள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பணி இடங்களுக்கான தேர்வு கடந்த 12ஆம் தேதி அன்று நடைபெற தொடங்கியது. தற்போது இந்த தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பு ஆண்டில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான திட்ட தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளில் மொத்தம் 9,494 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு, இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணி இடத்தில் உள்ள 167 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். அதன்பின் இதற்கான அறிவிப்பும் மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |