பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா, மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து செங்கவளநாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கோழி மற்றும் ஆடுகளை வெட்டியுள்ளனர். இதன்பிறகு பக்தர்கள் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டுதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்துள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.
திருவரங்கம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவிலில் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 9 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.