வங்காளதேசம் -ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 46.5 ஒவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 86 ரன்கள் குவித்தார. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.இதன்பிறகு 193 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் – ரியாஸ் ஹசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியாஸ் ஹசன் 35 ரன்னில் ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷா 47 ரன்னில் அட்டமிழந்து வெளியேறினார்.இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 40.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.