பிரபல நடிகை படகில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தை அடுத்து அவரது தாயார் தற்போது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
நிடா பட்சரவீரப்போங் என்பவர் தாய்லாந்து நாட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தாய்லாந்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை பாங்காக்கின் நந்தபுரியில் இருக்கும் சாவ்பிரயா ஆற்றில் போட்டிங் செய்தார் நிடா. போட்டிங் செய்துகொண்டிருக்கும்போது நிடா நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து நிடாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், பிப்ரவரி 26 போட்டிங் செய்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உடல் மீட்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போட்டிங் செய்த படகு லைசன்ஸ் பெறாதது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிடாவின் அம்மா எனது மகள் ஆற்றில் விழுந்து உயிர் இழக்கவில்லை. என் மகளை யாரோ கொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டுயுள்ளார். இதனால் போலீசார் அவருடன் போட்டிங் செய்த 5 பேரை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.