Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து….. தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓட முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வெங்கடேசனும் அந்த நபரும் இணைந்து மோட்டார் சைக்கிளை மதுரவாயலில் இருந்து திருடிவந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மதுரவாயல் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.

அப்போது திடீரென வெங்கடேசன் போலீஸ் வாகனத்தில் கண்ணாடியை உடைத்து கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவரின் கையையும் வெங்கடேசன் கண்ணாடியால் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |