காயத்துடன் சிரமப்படும் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் டாப்சிலிப்-பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் அந்த யானை ஒரே இடத்தில் நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது யானைக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.ஒருவேளை மற்றொரு யானையுடன் சண்டையிட்டதால் அதன் காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம். எனவே யானையின் நிலை குறித்து ஆய்வு செய்த உடன் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.