Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை அருகே உள்ள காமராஜ்புரம் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்பார்வை சரியாக இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |