Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |