தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பிற துறைகளை தொடர்ந்து மின்சார துறையிலும் பல்வேறு மாற்றங்களை அரசு நிகழ்த்தி வருகிறது. அந்த அடிப்படியில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மின் பயனர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 சலுகைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் பயனர்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்று முதல்வர் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் முற்றிலும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதன்படி தற்போது செயலி மூலமாக மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மின் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வாயிலாக உங்களின் மின் கட்டண தொகையை அறியலாம்.
அதனை தொடர்ந்து மின்துறை பணியாளர்கள் நேரடு முறையில் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளாமல் மென் பொருள் வாயிலாக மின்கணக்கெடுப்பு நடத்தும் அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகளானது இன்று (மார்ச்.1) முதல் தொடங்க இருக்கிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கணக்கெடுப்பு மூலமாக மின் கட்டணம் செலுத்தும் தேதி வரும்போது பயனர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்படும். இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.