சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 7 யூனிட் கிராவல் மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.