சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.