Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி தான் செய்ய வேண்டும்…. நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்…. விதிமுறைகளை அறிவித்த போலீஸ் கமிஷனர்….!!

திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த், பட்டாசு, தீப்பெட்டி, ஆலை ஆய்வுத் தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி அமீர் கோயல், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் சிவகுமார், மலையரசி, பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, மற்றும் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் ஆபத்தான தொழிலான பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளின்படி பட்டாசு தயாரித்தால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைக்கப்படும். இந்நிலையில் சில பட்டாசு ஆலைகளில் உள்ள அறைகளை உள்வாடகைக்கு உரிமையாளர்கள் விட்டு வருகின்றனர்.

மேலும் அவ்வாறு இனிவரும் காலங்களில் உன் வாடகைக்கு விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசு ஆலைகளில் மருத்துவ கலவை செய்யப்பட்டு பின்னர் சில வீடுகளில் வைத்து பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இதனால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு பெரும் முயற்சி ஏதும் நடக்கிறது. அதனால் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

Categories

Tech |