நடிகை பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் தவித்து வருவதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகையான பிரியா மோகனன் உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக வெளிவந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழில் இவர் பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை பூர்ணிமா இந்திரஜித்தின் சகோதரி ஆவார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். உக்ரைன் – ரஷ்யா போலீஸ் தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வருகின்றது. உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரஷ்யாவால் உக்ரைனில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனில் வாழும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மலையாள நடிகையான பிரியா மோகனன் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாகவும் அவரை குடும்பத்துடன் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதுகுறித்து ப்ரியா மோகனன் விளக்கமளித்துள்ளார். அவர் சென்ற ஆகஸ்ட் மாதம் உக்ரைனுக்கு சுற்றுலா சென்றதாகவும் தற்போது தான் குடும்பத்துடன் கொச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். நான் உக்ரைனில் சிக்கிக் கொண்டதாக வரும் தகவல்கள் பொய்யானது. போர் காலத்தில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.