நடிகை ராஷி கண்ணா தான் நடிக்கும் வெப் சீரிஸ் குறித்து பேசியுள்ளார்.
ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’ ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராசி கண்ணா தற்போது அஜன் தேவ்கனுடன் ‘ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடரில் நடித்த அனுபவம் பற்றி ராசி கண்ணா பேசியுள்ளார். அதில் “‘ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ்’ ஒரு த்ரில்லர் க்ரைம் தொடர் ஆகும். அந்தத் தொடரில் நான் அஜன் தேவ்கனுடன் இணைந்து நடித்துள்ளேன். அவரை நான் இதற்கு முன்னாடி எங்கேயும் பார்த்ததில்லை. முதன்முறையாக சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். அவருடன் நடிக்கும் போது எனக்கு பயமாக மற்றும் பதற்றமாக இருந்தது. இதனால் நான் பல காட்சிகளை சொதப்பி விட்டேன். இதைப் பார்த்து புரிந்து கொண்ட அஜன் தேவ்கன் என்னிடம் பதற்றம் வேண்டாம் என்று கூறினார். அவருடன் பழகிய பிறகுதான் தெரிகிறது அவர் மிகவும் எளிமையானவர் என்று, நான் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் . மேலும் இந்த வெப்சீரிஸ் அடுத்த மாதம் 4-ம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.