சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் சிவா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிவாவை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.