Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன்….. ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய தாய்…. திருச்சியில் பரபரப்பு….!!

மகனை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை புத்தாநத்தம் ரோடு பகுதியில் ராமசாமி- ஜெயலக்ஷ்மி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் சிவராசு பெரிய மிளகுபாறையில் இருக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரின் காலில் ஜெயலட்சுமி திடீரென விழுந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது மகன் ராஜேஷை உடனடியாக மீட்டு தரும்படி கதறி அழுதுள்ளார். மேலும் இதனை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது எனது மகன் பெயர் ராஜேஷ் உக்ரைன் நாட்டில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருகிறான். அங்கு நிலவும் போர் பதற்றம் காரணமாக ராஜேஷ் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறான். எனது மகனை மீட்டு தமிழகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் மகன் பத்திரமாக வீடு திரும்புவான். பயப்படாமல் இருக்கும்படி மகனுக்கு அறிவுரை கூறுங்கள் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Categories

Tech |