இந்தியாவில் பெரும்பாலான சினிமா துறையினர் உக்ரைனில் ஷூட்டிங் எடுத்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரால் உருக்குலைந்து விட்டது.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனில் உள்ள நகரான கார்கிவ்வை ரஷ்யா கைப்பற்றியதாக கூறியது. ஆனால் உக்ரைன் அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதாக கூறியுள்ளது. ஐந்து நாட்களாக நடந்து வரும் இப்போரில் பல உயிர்கள் பறிபோயுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனில் பலவிதமான சேதங்கள் ஏற்படுகின்றன. உக்ரைன் நாட்டில்தான் பலவிதமான ஷூட்டிங்குகளை இந்திய சினிமா துறையினர் எடுத்து வந்தனர். மேலும் ஆர்ஆர்ஆர், 99 சாங்ஸ், வின்னர், தேவ் உள்ளிட்டவற்றின் படப்பிடிப்பு உக்ரைனில்தான் தான் எடுக்கப்பட்டது.
உக்ரைனில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பனிப்பொழிவு இருப்பதால் அங்கு சூட்டிங் எடுப்பதாக இந்தியாவில் பல சினிமா துறையினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் உக்ரைனில் போர் நடைபெறுவதால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஷூட்டிங் எடுக்க முடியாது என வருந்துகின்றனர் சினிமா உலகினர். சரவணா ஸ்டோரின் உரிமையாளரான சரவணா அருள் மற்றும் ஊர்வசி ரவுட்டேலோ உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படத்தின் சில காட்சியானது உக்ரைனில் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உக்ரைனில் சென்ற டிசம்பர் மாதம் சரவணாஸ்டோர் அண்ணாச்சியின் திரைப் படத்தின் சூட்டிங் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.