Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய குற்றவாளிகள்….. திருச்சியில் பரபரப்பு…!!

தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

திருச்சி மாவட்டத்திற்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கறம்பக்குடி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அவரை பிடித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் எமனேஸ்வரம் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் வேல்முருகனை எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |