சேலையில் தீப்பிடித்ததால் பெண் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள இருங்களூர் மேலத்தெருவில் விமல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அனுசியா தனது மாமியாருடன் மாமனாரின் கல்லறைக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக சென்றுள்ளார்.இதனையடுத்து அனுசியா மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டிருந்தபோது அருகிலிருந்த கல்லறையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் தீ பெண்ணின் சேலையில் பிடித்தது.
மேலும் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால் அனுசியா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் அனுசியாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அனுசியா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.