வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ராஜ் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஷ்வின் மற்றும் கணேஷ் இருவரும் ராஜிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அஷ்வின் மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.