Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிகுடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் கேட்டரிங் படித்து முடித்து விட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாரிமுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |