சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் ஓம்சக்தி நகரில் மனோஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமியின் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு 16 வயது தான் ஆகிறது என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக மனோஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.